டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீது தாக்குதல்!

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் ஐசியு வார்டு இல்லாததால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் அவரது உறவினர்கள் கடும் கோபமடைந்தனர்.

தற்போது நோயாளியின் உறவினர்கள் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் உறவினர்கள் டெல்லி அப்பல்லோ மருத்துவமனைக்குள் புதுந்து ஐசியு வார்டு மற்றும் அங்கு பணிபுரிபவர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். மேலும் மருத்துவ உபகரணங்கள் பலவும் சூறையாடப்பட்டன. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *