’ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும்’ ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் – திமுக கூட்டணி
இந்தியாவில், பரவும் கொரோனா இரண்டாவது அலையால் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல உயிர்கள் பலியாகி வருகிறது. இதனையடுத்து, நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க தங்கள் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. உயிர்பலியைத் தடுப்பதற்காக ஆலையை திறக்கலாம் என இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், திமுக சார்பில் கனிமொழியும், ஆர்.எஸ் பாரதிக்கும் கலந்து கொண்டனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.