ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறதா?

இந்தியாவில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு போராடி வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து, முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு ஆக்ஸிஜன் மட்டும் தான் உற்பத்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிச்சாமி பேசும் போது, “ஸ்டெர்லை ஆலையைத் திறப்பது என்பது அரசின் நோக்கமல்ல ஏனெனில் மூடியதே அரசு தான். மக்களின் உயிர் சம்பந்தமான விஷயம் என்பதால் ஆலையைத் திறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்” என கூறியுள்ளார்.

4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து, அரசு வழங்கும் மின்சாரத்தை மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *