மே1 மற்றும் 2 ல் முழு ஊரடங்கிற்கு நீதிமன்றம் பரிந்துரை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது.

இன்று காலை, தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூடிய கூட்டத்தினால் தான் தற்போது கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளான மே 1 ஆம் தேதியும் முழு ஊரடங்கு நடந்த பரிந்துரைப்பதாக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அதிகமாக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவே இந்த யோசனையை தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *