செங்கல்பட்டு அருகே பேருந்து மோதி விபத்து… 4 பேர் பலி!

செங்கல்பட்டு கூவத்தூர் அருகே இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செங்கல்பட்டு அருகே மோதிக்கொண்டன. இதனையடுத்து இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

4 பேர் பலியான நிலையில் 6 பேர் சிகிச்சைக்காக செஙகல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *