நீங்கள் அசைவப் பிரியரா… உங்களுக்கான அதிர்ச்சி செய்தி இதோ!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் சனிக்கிழமையே இறைச்சிக் கடைகளில் அலைமோத ஆரம்பித்தனர். இறைச்சி கடைகளில் தனி மனித சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று தமிழக அரசு சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளுக்கு தடைவிதித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தேவையின்றி இறைச்சி கடைகளில் அலைமோதுவதை தடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.