ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மறுக்கப்பட்ட விசிக, மதிமுக!

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விசிக, மதிமுக கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை கூறப்படுகிறது.
இந்த வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியுள்ள நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்தார். இந்த நிலையில் வேதாந்தாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.