அசத்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா… அபார வெற்றி பெற்ற சென்னை!
்இன்று நடந்த 19வது ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களையே எட்டியது. இதன் மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை வீரா் ஜடேஜா, பேட்டிங்கில் கடைசி ஓவரில் 5சிக்ஸா்கள் விளாசி 36 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டியில் கெயிலின் சாதனையை சமன் செய்தார். மேலும்அவர், அணியின் ஸ்கோரை அதிரடியாக உயா்த்தியதுடன், பௌலிங்கிலும் மேஸ்க்வெல், டி வில்லியா்ஸ் உள்பட 3 விக்கெட்டுகளை சரித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.