பிறந்தநாளில் முக்கிய கோரிக்கை விடுத்த சச்சின்!

தனது 48வது பிறந்தநாளைக் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இன்று கொண்டாடிய சச்சின், தனது ரசிகர்களிடம் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவின் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படுபவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்பட்டது. வீட்டிலேயே தனிமையில் இருந்து சிகிச்சைப் பெற்று வந்த சச்சின் தற்போது குணமாகியுள்ளார்.

மேலும் இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் உலகில் உள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். இதனையடுத்து வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சச்சின்.  அதில், “ கடந்தாண்டு பிளாஸ்மா தான மையத்தை தொடங்கி வைத்தேன். இந்த நேரத்தில் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன். நான் பிளாஸ்மா தானம் செய்ய மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். அவர்கள் எப்போது கூறுகிறார்களே, அதனை செய்ய ஆர்வமாக உள்ளேன். அதுபோல் கொரோனாவிலிருந்து மீண்ட அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *