இவ்ளோ தான் ஆக்ஸிஜன் இருக்கு… கதறும் டெல்லி மருத்துவமனைகள்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்க போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அரசிடம் தேவையான ஆக்ஸிஜன்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள பத்ரா மெடிக்கல் ரீசர்ச் டெண்டர் மருத்துவமனை தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 260 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான 8000 மெட்ரிக் லிட்டர் ஆக்ஸிஜன் வழங்க அரசிடம் மருத்துவமனை சார்பாக உதவிக் கோரப்பட்டது. இதனையடுத்து டெல்லி அரசு 500 மெட்ரி லிட்டர் ஆக்ஸிஜனை அனுப்பியுள்ளது.
அரசு அனுப்பிய ஆக்ஸிஜன் வெறும் ஒன்றரை மணி நேரத்திற்கு மட்டுமே வரும் என்றும், மேலும் அனுப்பினால் தான் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று அரசிடம் முறையிட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலையில் ஆக்ஸிஜன் இல்லாமல் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் தனியார் மருத்துவமனையில் 25 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.