தமிழகத்தில் 15,000 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 15,000 ஐ நெருங்கியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”புதிதாக கொரோனா தொற்றால் 14,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,66,329ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 80 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,475ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 4,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 9,142பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,52,186ஆக அதிகரித்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.