ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் தொடரும் உயிர் பலி!
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. தொடர்ந்து வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில், நேற்று இரவு மட்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், டெல்லி பவித்ரா மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.