கொரோனாவை கட்டுப்படுத்த ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடப்படுமா?
தமிழகத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் பரவும் வேகமும், பாதிப்பின் வேகமும் அதிகமாக உள்ளதால் தமிழக அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.
ஆனாலும், தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இதனால், இன்று மாலை மேலும், பல கடினமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் வருகையை குறைப்பது, திரையரங்குகள் மட்டும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை மூட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.