மக்களின் உயிர் முக்கியமா? சட்டம் ஒழுங்கு முக்கியமா? உச்சநீதிமன்றம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. இதனையடுத்து, பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினால் மக்கள் இறந்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தினால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தங்கள் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதற்காக அனுமதி கேட்டது.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசும் மக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உச்ச நீதி மன்றம் தமிழக அரசிடம், “சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி தமிழக அரசு இப்படி சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில் மக்களின் உயிர் முக்கியமா? சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கியமா?” என கேள்வி கேட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு உரிய பதிலை அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.