தடுப்பூசிக்கு ஒரே விலை… மாநிலங்கள் ஒன்று சேருங்கள்! – ப.சிதம்பரம் வேண்டுகோள்

இந்தியாவில் தடுப்பூசிக்கும் போடப்படும் தடுப்பூசிகளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்க கோரி மாநிலங்கள் ஒன்றாக சேர வேண்டுமென ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட், ரெம்டிசிவிர் போன்ற மூன்று விதமான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விலையை தயாரித்துள்ள தனியார் மருந்து நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. கோவிஷீல்ட் தயாரித்துள்ள சீரம் நிறுவனம் 2டோஸ் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் இந்த தடுப்பூசி தயாரித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் அதற்கென்று எந்த விதமான கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாபநோக்கத்திர்காக விலையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து முற்றிலும் தவறி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சரணடைந்துவிட்டது. தடுப்பூசிகளுக்கு பல்வேறு விதமான விலைகளை வைத்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது பிற்போக்குத்தனமானது. மத்திய அரசின் இந்த முடிவை மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை புறக்கணித்து, ஒரே விலையை அமல்படுத்த ஒரு குழு அமைத்து முயற்சிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.