தமிழகத்திற்கு இன்று வருகிறது 2லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

இந்தியாவில், கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், தினசரி கொரோனா பாதிப்பு பதின்மூன்றாயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசும் தொற்றைக் கட்டுப்படுத்த பல பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என சொல்லப்படுகிறது.

பல மாநிலங்களில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு 10 நாட்களுக்குள் 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வேண்டும் என பிரதமருக்கு எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இன்று 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து சென்னைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *