தமிழகத்தில் ஒரே நாளில் 14,000 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 13,776 பேர் பாதிக்கப்பட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியாவில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு நாளில் கோரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,776. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்னிக்கை 10,51,487ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக  உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,842 பேருக்கு கோரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 8,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை அடுத்து மொத்தம் 9,43,044 பேர் முற்றிலுமாக குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *