18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது?

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில் தற்போது வருகிற மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது வருகிற ஏப்ரல் 28 முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதி தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.