ஆக்ஸிஜன் பெயரைக் கூறி நச்சு ஆலையை திறக்க முயற்சி! வைகோ கடும் கண்டனம்

கொரோனா இரண்டாவது அலை பரவலால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தங்களது ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உயர்நீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனைத்தை வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுபாடு இல்லவே இல்லை. இந்தியாவில் இருந்து 9300 மெட்ரிக் டன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிஜனை காரணமாக வைத்து ஸ்டெர்லைட் என்னும் நச்சு ஆலையைத் திறக்க முடிவு செய்துள்ளனர் என வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தனர். அதுமட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளின் உழவுத் தொழிலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என உயர் நீதி மன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, அந்த ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக் கூடாது என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *