ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி!
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கினால் அந்த ஆலை மூடப்பட்டது.
இந்தியாவில், தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில், நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என ஸ்டெல்லைட் நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்து கொள்ள உச்ச நீதி மன்றம் அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என நீதி மன்றத்தில் மத்திய அரசு வாதமிட்டுள்ளது.