மரத்தோடு மாநாடு நடத்திய சிம்பு
தமிழ் திரையுலகின் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக், உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் காலமானர். இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை மெய்ப்படுத்தும் விதமாக, ’கிரின் கலாம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி 1 கோடி மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டி வந்தார் விவேக்.
அதன்படி, இதுவரை 34 லட்சம் மரக்கன்றுகளை விவேக் வெற்றிகரமுடன் நட்டு முடித்துள்ளார். பாதியில் நின்று போன பணியை அவரது ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் கையில் எடுத்துள்ளனர்.
விவேக் இறந்த போது, இரங்கல் செய்தி வெளியிட்ட சிம்பு விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கூறியிருந்தார். தான் கூறியது வெறும் வாய்வார்த்தையாக மட்டுமல்லாமல் அதை தற்போது செயல்படுத்தியும் உள்ளார் நடிகர் சிம்பு.
தற்போது, தான் நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன், ’மரத்தோடு மாநாடு’ என்ற பெயரில் அஞ்சலி கூட்டம் நடத்தியுள்ளார்.