ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 11000 த்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து, தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரப்படுத்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது.