மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவல் குறித்த அடுத்த கட்ட முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பகிறது.
காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களின் நிலை குறித்து ஆலோசிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.