தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 12,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3789 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை , திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 59 பேர் பெருந்தொற்றால் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,317 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7526 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பிரதர் மோடி கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.