குஜராத் மாடலுக்கு வந்த சோதனை… இறப்புக்காக காத்திருக்கும் அவலம்!

குஜராத்தில் மருத்துவம் பார்ப்பதற்கு கூட மருத்துவமனைகள் கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் வீட்டிலிருந்தே கட்டிலுடன் வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுவும் மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
அதிலும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சுடுகாட்டில் இறந்த நோயாளிகளுக்கு அடக்கம் செய்வதற்கு கூட இடமில்லாமல் நடைபாதையில் எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டிலிருந்து வரும்போதே மருத்துவமனை கட்டில் சகிதம் வருகின்றனர்.
அப்படியே வந்தாலும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளி இறந்தால் தான் மருத்துவம் பெற முடியும் என்னும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.