இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்…சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
இரு சக்கர வாகனங்களுக்கு இனி வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் சரிவர செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு சக்கரவாகனங்களில் வேகமாக செல்வதாலேயே விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.