பேட்டிங்கை தேர்வு செய்தது பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் போட்டியின் 14 வது லீக் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.