சன்ரைசர்ஸ் அணியிடம் சரணடைந்த பஞ்சாப் கிங்ஸ்!

இன்றைய ஐபிஎல் போட்டியின் 14வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.  டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கே.எல். ராகுலும், மயாங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.  3வது ஓவரில் 4 ரன்களுக்கு  கே.எல் ராகுல் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து  5 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன்பிறகாவது ஆட்டம் சூடு பிடிக்கும் என்று ஒரு முனையில் கெயில் கல்லாக நின்று  ஓட மறுக்க, மற்றொரு புறம் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர். இதனையடுத்து 10 ஓவர்களில் 53 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்தது. முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய ஹூடா, இரட்டை இலக்கை தொட்டு ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கானின் அதிரடியால் அந்த 100ஐ கடந்து 120 ரன்கள் குவித்ததுள்ளது. ஐதராபாத் அணி 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *