நாசிக் வாயு கசிவு : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மஹராஷ்டிராவில் நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட வாயு கசிவால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மஹராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் தேவையான ஆக்ஸிஜன் வாயு டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு மாற்றப்படும்.
இன்று காலையில் அவ்வாறு மாற்றப்பட்டபோது எதிர்பாராத விதமாக டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட்டு வந்த ஆக்ஸிஜன் வாயு தடைப்பட்டதால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆக்ஸிஜன் வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆக்ஸிஜன் வாயு தடைப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.