மே 2 நள்ளிரவுக்குள் முடிவு வெளியிடப்படும்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி தொடங்கி அன்றே முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டி உள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவு அன்றே வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, இன்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைத்து முகவர்களுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்படுவது குறித்து ஆலோசனை நடத்திப் பட்டு வருகிறது. மேலும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக வாக்கு என்னும் நேரம் நீடிக்கப்படும். மே 2 ஆம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.