தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் வேகம் குறையாமல் நாளுக்கு நாள் பரவல் வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3750 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை நெருங்குகிறது.

இன்று ஒரே நாளில் 51 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *