ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் பலரும் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து ராகுல் காந்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா உறுதியானதால் தனது மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.