புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!
இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்குகளும், வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், முழுமையான ஊரடங்குகளும் நடைமுறையில் உள்ளது. இதனால், ஊரடங்குகள் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற அச்சத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் மத்தியப்பிரதேசத்தின் சர்தார்பூர், திகம்கர் ஆகிய ஊர்களுக்கு பேருந்து சென்றது. அந்த பேருந்து குவாலியர் மாவட்டம் ஜொராசி அருகே சென்று கொண்டிருந்த போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.