ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

தமிழகத்தில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேருந்து பயணங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுள்ளதால் நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், இரவு நேர ஊரடங்கின் போதும் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 45 வயதைக் கடந்த ஓட்டுனர்களும், நடத்துநர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து பணிமனை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *