தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இன்று ஓரே நாளில் 10986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, கோவை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக 3711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் சிகிச்சை பலனளிக்காமல் 17 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *