எவ்வளவு வேணுமோ முன்கூட்டியே கேட்டு வாங்கிக்கங்க… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை என கூறி வந்த நிலையில் இன்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாநில அரசுகள் அவர்களின் தேவைக்கேற்ப முன்கூட்டியே கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.