தமிழகத்தில் இன்றுமுதல் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக அரசு அறிவிப்பின்படி இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியதையடுத்து  இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை தனியார் /பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர மருத்துவ தேவை மற்றும் பால் மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேர ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய சுமார் 200 இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *