கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய பிரபல நடிகர்.. அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்!
நடிகர் விவேக் மறைந்ததையொட்டி கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அதற்கு ஒருநாள் முன்னதாக அரசு மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி போட்டிருந்தார். இதனால் கொரோனா தடுப்பூசியின் மேல் பொதுமக்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய மன்சூர் அலிகான், ஒருநாள் முன்னதாக செலுத்தப்பட்ட கொரொனா தடுப்பூசிகாரணமாக தான் அவர் இறக்க நேரிட்டது எனவும், இந்தியாவில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் எழுப்பிய அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று அவதூறு கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது தொற்றுநோய் தடுப்பு, பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல்நிலையத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.