இந்தியாவை, பாகிஸ்தானுடன் சிவப்பு பட்டியலில் சேர்த்த பிரிட்டன்!
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, நாட்டிற்குள் வர தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுடன், இந்தியாவையும் பிரிட்டன் அரசு சேர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஒருநாளில் கொரொனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து கொரோனா பரவல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும் இந்தியர்களை தங்கள் நாட்டிற்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது பிரிட்டன் அரசு, இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்கு வர அனுமதி மறுத்துள்ளதுடன், இந்தியாவை சிவப்பு பட்டியலிலும் சேர்த்துள்ளது.
பிரிட்டன் அரசு ஏற்கெனவே பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.