மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு!

தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே2 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.
காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அதை யாராலும் ஹேக் செய்ய முடியாது. அது கால்குலேட்டர் போல தான் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், உள்ள பலர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் சத்ய பிரதா சாகு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.