சுடுகாட்டில் சடலங்களை எரிக்கக்கூட இடமில்லை… ஆனால் கூசாமல் பொய் பேசும் உத்தரபிரதேச அதிகாரிகள்!

உத்திரபிரதேசத்தில் சடலங்களை எரிக்க கூட இடமில்லாமல் உள்ள நிலையில் இதுவரை ஏப்ரல் மாதத்தில் 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள சுடுகாடுகள் கொரோனாவால் பலியான சடலங்களால் நிரம்பி வழிகிறது. மேலும் சுடுகாடுகளில் சடலங்களை எரிக்க இடம் கிடைக்காததால் நடைபாதையில் வைத்து எரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 2 நோயாளிகள் மட்டுமே இறந்துள்ளதால் அம்மாநில கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நாள்தோறும் கொரோனாவால் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் நிலையில் அதிகாரிகள் இந்த அலட்சியமான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *