பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு ஆபத்து!

தஞ்சாவூரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அனுமதியில்லாமல் பொது இடங்களில் நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்ற மதுரை கிளை, “2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டப்படி அனுமதியில்லாத சிலைகளை நீக்க வழி உள்ளது.

இதனால், சாலை ஓரங்கள், சாலை நடுவில், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்குத் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *