மீண்டும் அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமெடுத்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி மாலை மறுபடியும் மருத்துவர்களுடன் அவரச ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தடுப்பூசி தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.