முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மன்மோகன் சிங் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *