மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு!

கொரோனா பரவல் அதிகரிப்பால் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை குறைத்து புதிய அறிவிப்பினை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின் படி கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே இயங்கும் என்றும், அதேசமயம், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் என்றும், கடைசி மெட்ரோ ரயில் சேவையானது இரவு 9.05 வரை இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை  இயக்கப்பட்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *