கொரோனா பாதிப்பின் உச்சத்தில் டெல்லி! அமலாகிறது முழு ஊரடங்கு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற வடமாநிலங்களில் பாதிப்பின் வேகம் உச்சம் பெற்று வருகிறது.
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
மாநில அரசு விதித்திருந்த பாதுகாப்பு நடைமுறைகளும் பலனளிக்கவில்லை. எனவே, டெல்லி அரசு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று இரவு முதல் அடுத்த வாரம் திங்கள் கிழமை காலை வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், அனைத்து தனியார் துறை ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசாங்க அலுவலங்களும், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.