18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!

இந்தியாவில் 18 வயதை நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தனது கோர முகத்தை தொடர்ந்து காட்டி கொண்டே வருகிறது. தினமும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதுவரை 45 மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை தளர்த்தி உள்ளது.

வரும் மே 1 ம் தேதி முதல் இந்தியாவில் 18 வயதை நிரம்பிய அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *