அன்புமணி ராமதாஸ் உட்பட 6 பேருக்கு பிடிவாரண்ட்!

மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத பாமக இளைரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட 6 பேருக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மாமல்லபுரத்தில் பாமக நடத்திய சித்திரை திருவிழாவின் போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கலவரத்தில் காரணமாக இருந்ததாக பாமக இளைரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யாருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து  இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி ராமதாஸ் உட்பட 6 பேர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *