12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, மே 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசும் பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வுகள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்னதாக 15 நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தேர்வு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.