தொடரும் சோகம்…இன்று வேலூரில் 3 பேர் பலியான பரிதாபம்!
பட்டாசு ஆலை தீவிபத்து சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக மாறி வருகிறது. இந்த சோகம் இன்று வேலூரில் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று பிற்பகல் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும் 3 பேர் பலியாகியுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரும் அவரது பேரக்குழந்தைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதம் ஆனதே உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.